பெங்களூர் நடைபாதை ஓவியக் கண்காட்சி

பெங்களூர் நடைபாதை ஓவியக் கண்காட்சி(31.01.10).

கடந்த சில வருடங்களாக பெங்களூரில் அரசு ஆதரவோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்கள் ஓவியங்களைக் காட்சிப் படுத்த குழுமுகிறார்கள். கேரளம் தொடங்கி நேப்பாள் வரை ஓவியர்களைக் காண முடிந்தது. .


நீண்ட நாட்களாக கேள்விப்பட்டிருந்த இக்கண்காட்சியை இந்த ஆண்டு நானும் சில மாணவர்களும் சென்று பார்த்தோம்







ஒரு சென்னை ஓவியரிடம் என் மாணவர் ஒருவர் கேட்டார். இவ்வளவு செலவழிச்சு வர்ற அளவுக்கு படங்கள் விற்பனையாகுமா? என்று. அவர் சொன்னார், படங்கள் விற்பனையாவது ஆகாமல் போவது என்னைப் பொறுத்தஅளவில் முக்கியமல்ல. உலகின் எந்த ஒரு நகரத்தில் கண்காட்சி வைத்தாலும் இப்படி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் என் ஓவியங்களைப் பார்க்கப் போவதில்லை. அது தான் இந்தக் கண்காட்சியின் விசேசம் என்றார்.


கூட்டம் அலையெனத் திரண்டதைப் பார்த்தபோது அந்த உண்மை புரிந்தது.

0 comments:

Post a Comment