ஓர் இணையப் பயிலரங்கம்.

*
மதுரையின் தமிழ்ப்பதிவாளர்களோடு எங்கள் துறையும் இணைந்து ஒரு இணையப் பயிலரங்கம் நடத்தினோம். நடந்தவைகளின் தொகுப்பு இதோ:



சீனா - குழுமப்பதிவுகள் பற்றி ...



பேராசிரியர்கள்: ஜாய்ஸ், சைலஸ் & ப்ரபாகர்











OPERATORS !! உண்மையிலேயே நல்ல இயக்குனர்கள் தான்!











ஜெரி - உயிர்நீத்த முத்துக்குமரனின் மரணமே தன்னை ஒரு பதிவாளனாக ஆக்கியது என்று அந்த முத்துக்குமரனின் உயிர்நீத்த முதலாண்டு நினைவு நாளன்று கூறியது நன்கிருந்தது.











பாலக்குமார் - டெக்னிக்கல் மனிதரில்லையா .. பதிவுகள் பற்றிய தொழில் நுணுக்கங்கள் பற்றி உரையாற்றினார்.

ஸ்ரீ - புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்பதை விளக்கி, வந்திருந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் காட்சித் தொடர்பியல் (VISUAL COMMUNICATION)துறையினராக இருந்ததால் viscom-ac@blogspot.com என்ற ஒரு புது வலைப்பூவை ஆரம்பித்து, மாணவர்களின் பங்களிப்பை ஆரம்பித்து வைத்தார்.













கார்த்திகை - இறுதியாகப் பேசியதாலும் நேரப்பற்றாக் குறையிருந்ததாலும் பேசிய குறைந்த நேரத்தில் வலைப்பூவிற்கு வரும் ஆவலை ஏற்படுத்தினார்.




பேராசிரியரும், காட்சி ஊடகத்துறையின் தலைவருமான ப்ரபாகர் நன்றி நவிலும்போது, வலைப்பூக்கள் மாற்று ஊடகமாக வலுப்பெற்று வரும் இன்றைய நிலை பற்றிக் கூறினார்.


கிடைத்த சில feedbacks.

* வலைப்பூக்களைப் பற்றிய தருமியின் உரை இன்னும் அடிப்படையில் ஆரம்பித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

* நேரம் இன்னும் சிறிது நீட்டியிருந்தால் இன்னும் பலனுள்ளதாக இருந்திருக்கும்.

* நாங்கள் நினைத்தவாறு பல பதிவுகளைக் காண்பித்து அவைகளைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்க முடியாதவாறு போயிற்று.

* எதிர்க்கவிதை ஒன்றை சீனா வாசித்த போது மாணவர்களின் உற்சாகம் அவர்களது மகிழ்ச்சியில், கைதட்டலில் ஒலித்தது.

* மாலையில் சந்தித்த ஒரு பேராசிரியர் ஒரு வகுப்பறையில் மாணவர்களிடையே பதிவுகள் பற்றிய ஒரு உரையாடலைக் கேட்டதாக ஒரு தகவலைக் கூறினார்.


கடை விரித்தோம் ....


இன்னும் சில படங்களும் செய்திகளும் மற்ற பதிவுகளில் ...


மற்றைய பதிவுகள்:
http://solaiazhagupuram.blogspot.com/2010/01/blog-post_30.html


*
*

0 comments:

Post a Comment