Workshop on Clay Modeling

Clay Modeling Workshop was organised by the department. This is very basic for visual art students, particularly those who want to work in the feild of  2-D, 3-D Animation. 

RAJSEKAR







ராஜசேகர். விஸ்காம் மூன்றாமாண்டை முடிக்கப் போகிறேன்.என் படங்களைப் பார்த்து நாலு நல்ல வார்த்தை சொன்னால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்.

ஓவியர் மருதுவுடன் மூன்று நாட்கள்

பிரபல ஓவியர், கலை இயக்குனர் ட்ராட்ஸ்கி மருது மூன்று நாட்கள் தங்கியிருந்து தற்கால ஓவியங்கள் குறித்த பயிலரங்கம் நடத்தினார். அதில் ஓவியக்கலை பற்றிய உரைகள், கலந்துரையாடல்கள், கேள்வி பதில்கள், டெமோக்கள் எனறு பலவாறாக அவரின் பங்களிப்பு இருந்தது. சார்க்கோலால் காகிதத்தில் ஒரு மாணவரை வரைந்து காட்டியதும்- கேன்வாஸ், வண்ணங்களைத் தொடாமலேயே கணனியில் வரைந்து காட்டியதும் காணக்கிடைக்காத காட்சிகள். கோரல் பெயிண்ட்டர் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மிக சுவாரஸ்யமான இணைவுகளைச் செய்தார். ஒரு கோடாக ஆரம்பித்து படிப்படியாக ஓவியம் உயிர் பெறும் காட்சி ஒரு அழியாத அனுபவம்.

நடிகர் இயக்குநர் நாசர் வந்திருந்தார்







[Photo]ஒரு படப்பிடிப்பிற்காக மதுரை வந்திருந்த நாசர், காந்தி குல்லாயில் காந்தி மீயூசியத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அழைத்த போது எந்த பீடிகையுமில்லாமல் வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களோடு கலந்துரையாடினார்.நடிகன், நடிப்பு, நாடகம், நாட்டுப்புறக்கலைகள்,கலைப்படங்கள், அரசியல் என சளைக்காமல் பதிலளித்தார்