ஓவியர் மருதுவுடன் மூன்று நாட்கள்

பிரபல ஓவியர், கலை இயக்குனர் ட்ராட்ஸ்கி மருது மூன்று நாட்கள் தங்கியிருந்து தற்கால ஓவியங்கள் குறித்த பயிலரங்கம் நடத்தினார். அதில் ஓவியக்கலை பற்றிய உரைகள், கலந்துரையாடல்கள், கேள்வி பதில்கள், டெமோக்கள் எனறு பலவாறாக அவரின் பங்களிப்பு இருந்தது. சார்க்கோலால் காகிதத்தில் ஒரு மாணவரை வரைந்து காட்டியதும்- கேன்வாஸ், வண்ணங்களைத் தொடாமலேயே கணனியில் வரைந்து காட்டியதும் காணக்கிடைக்காத காட்சிகள். கோரல் பெயிண்ட்டர் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மிக சுவாரஸ்யமான இணைவுகளைச் செய்தார். ஒரு கோடாக ஆரம்பித்து படிப்படியாக ஓவியம் உயிர் பெறும் காட்சி ஒரு அழியாத அனுபவம்.

0 comments:

Post a Comment