2009 Audio- Video Fair சென்னையில் நடந்ததை ஒட்டி எங்கள் field trip ஏற்பாடானது. சென்னை நந்தம் பாக்கம் டிரேட் செண்ட்டரில் நடந்த கண்காட்சியில், வகை வகையான கேமராக்கள், லைட்டிங் சாதனங்கள், மேக்கப் workshop என்று மிரட்டின. கைக்காசு போட்டு எதுவும் வாங்க முடியாது என்பதால்தான் கண்காட்சி என்று சொல்கிறார்களோ என்னவோ......நாராயணன். 2nd VISCOM.
எழும்பூரில் இருக்கும் லலித் கலா அகாடமி ஜப்பானிய கலைப் பொருள் கண்காட்சி ஒன்றைப்பார்க்க வாய்த்தது.
அங்கே இருந்த ஆர்ட் காலரியில் ஓவியர்கள் வரைந்து கொண்டிருந்ததை பார்த்தோம். மண்சிற்பங்கள், உலோக சிற்பங்கள் , பெரிய கான்வாஸ்கள் என்று.. அது வேறு உலகமாக இருந்தது... கார்த்திகா 2nd VISCOM
சென்னையின் கூத்துப்பட்டறை சினிமா வட்டாரங்களில் அதிகம் அடிபடும் ஒரு பெயர். நாசர், பசுபதி, கலைராணி, குமாரவேல் ஆகியோர் பிரபலமானபின் சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்கள் நிறையப் பேர் அங்கே பயிற்சிக்குச் செல்வதாகச் சொன்னார்கள். உண்மையில் நாடகக் கலையை வளர்ப்பதற்காக நா.முத்துச்சாமியால் ஆரம்பிக்கப்பட்டது தான் கூத்துப்பட்டறை. நவீன நாடகங்கள், பரிசோதனை முயற்சிகள், நாட்டுப்புற நிகழ்கலைகளுடன் இணைந்த முயற்சிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுவரும் அமைப்பு அது. நாங்கள் சென்னை சென்ற நேரத்தில் அவர்களின் நாடக நிகழ்வு ஒன்று இருப்பதாக அறிந்து அங்கே சென்றோம். நாடகம் என்று இதுவரை நாங்கள் பார்த்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்த் பயணத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த அம்சமாக இதைத்தான் சொல்வேன்.... மனோஜ் 3rd VISCOM